நேர் கண்டவர்கள்: சுஜப் காசிம்.
பெயர் : அ. வரதராஜப் பெருமாள்
பிறந்த திகதி : 1953 ஜூன் 08
பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
பாடசாலை : கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம் (ஆண்டு 10 வரை)
க.பொ.த. உயர்தரம் (தனியார் நிறுவனம்)
பதவிகள் : யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்
வடக்கு - கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்
கல்வித்தகைமை : யாழ். பல்கலைக்கழகம் (பொருளியல் சிறப்பு)
அரசியல் விஞ்ஞானம், (
பிள்ளைகள் : 3 பெண்கள்
சிறப்புத் தகமை. 1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றமை.
கேள்வி:-தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்ர்கள்?
பதில்:-கடந்த 3தசாப்தங்களுக்கு மேலாக இந்நாட்டை உலுக்கி வந்த கோர யுத்தம் முடிவுக்கு வந்திருப்பது மிக நல்ல விடயம்.
யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட அழிவுகள்சிதைவுகள் சீரழிவுகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நாம் ஒரு முன்னோக்கிய கால கட்டத்தில் போக வேண்டிய சூழல் இன்றுள்ளது.
புனர்வாழ்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. மக்கள் மத்தியில் பீதியற்ற ஒரு சூழல் உருவாக வேண்டும்.ஜனநாயகம் என்பது தேர்தலில் மட்டும் நின்றுவிடாது எல்லா விடயங்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.போர் சுனாமி மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் மக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நமது நாட்டு மக்களை மீட்கும் துரித வேலைத்திட்டங்கள் தேவை. ஜனாதிபதியும் அரசாங்கமும் இதற்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட்டு வருகின்ற போதும் இன்னும் வேகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
ஆளுங்கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே ஒரு ஜனநாயக பூர்வமானநாகரீக பூர்வமான ஓர் அச்சமற்ற உறவு வளர்ச்சியடைய வேண்டும்.அரசியல் நாகரீகம் மேலோங்கியுள்ள ஒரு நாடு என்ற வகையில் ஒரு மனப்பக்குவம்அரசியல் முதிர்ச்சி ஆகியவை நமக்கிடையில் வளர்ந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.இவை படிப்படியாக மாறும் என்றே நான் நம்புகின்றேன்.
கேள்வி:-யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கொலைகள் கொள்ளைகள் கடத்தல் என்பவற்றை நீங்கள் எந்தக் கோணத்தில் பார்க்கின்aர்கள்?
பதில்:-இவை மக்கள் மத்தியில் பயபீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. இவற்றை நீக்க வேண்டிய முதற் பொறுப்பு அரசுக்கு உண்டு. குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி மக்களுக்கு ஒரு பயம் ஏற்படாத வண்ணம் கருமங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்தச் சம்பவங்களை வெளியில் கொண்டு வரக்கூடிய பொறிமுறை அரசாங்கத்திடமே இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்களை தொகுத்து பார்க்கும் போது வெறுமனே அரசியலற்றது என்று சொல்வதற்கில்லை.தனிப்பட்ட கொலைகள்கொள்ளைகள் நடந்திருக்கும் அதேவேளை அரசியலும் ஏதோ வகையில் கலந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.அங்கு இடம்பெறும் சம்பவங்களை தனிப்பட்ட மோதல்களின் விளைவுகள் என்று கூறுவது சரியானதல்ல.
