Wednesday, August 31, 2011

தமிழர்களுக்கு மாநில சுயாட்சி கொண்டதாக இலங்கைக் குடியரசு அமைய வேண்டும்.......

வடக்கு-கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் eprlf-பத்மநாபா அமைப்பின் அ.வரதராஜப்பெருமாள் அவர்களால் எழுதப்பட்டு டிசம்பர் 2006 'சண்டே இந்தியா"; சஞ்சிகையில் பிரசுரமான கட்டுரை


இலங்கையில் கொழுந்து விட்டு எரியும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இங்கு சமாதானம் மலர்ந்து அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் ஒருமுகமாக இணைந்து தேசசமூக பொருளாதார முன்னேற்றங்களுக்காக உழைக்க வேண்டும் என்பதே எனது மனமார்ந்த உடனடி விருப்பமாகும்.

மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியற் தீர்வு வேண்டும் எனக் கோரி நிற்கின்றனர். மாகாண சபைகளுக்கு எந்தளவு அதிகாரங்களைப் பகிர்ந்தாயினும் இலங்கையைப் பிளவு படுத்தாமல் ஓர் அரசியற் தீர்வு காணப்பட வேண்டும் எனப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் கோருகின்றனர். இந்தியாவும் சர்வதேச சமூகங்களும் சமஷ்டி அடிப்படையிலோ அல்லது அதற்கு அண்மித்த அமைப்பு வடிவிலோ பரஸ்பரம் அனைத்து சமூகங்களும் சகோதரத்துவத்துடனும்ää சமத்துவத்துடனும் வாழும் வகையில் அதிகாரங்களைப் பகிரும் ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என தெளிவாகத்; தத்தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றுபட்ட இலங்கையைப் பிளவு படுத்தாத வகையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கு தமது ஆட்சி தயாரென மீண்டும் மீண்டும் கூறி வருகின்றார். ஏதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் சமஷ்டி அமைப்பு முறை மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தமது கட்சி முயலும் என்கிறார்.

ஓர் அரசியற் தீர்வுக்கு உண்மையில் எவையெல்லாம் அவசியமோ அவையெல்லாம் தயாராகவே உள்ளன. ஆனால் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளையும் புலிகளின் பிடிவாதமான பிரிவினை நிலைப்பாட்டையும் காரணம் காட்டி இலங்கையின் இரு பெரும் கட்சிகளும் அரசியற் தீர்வுக்கான முன்னெடுப்புக்களை பின்தள்ளிப் போட்டு வருகின்றமை அவற்றின் உண்மையான உள்ளார்ந்த நோக்கங்கள் பற்றிய சந்தேகங்களையே வலுப்படுத்தி வருகின்றன. இந்தக் கட்சிகள் சிங்கள இனவாதிகளையும் புலிகளின் பயங்கரவாதத்தையும் காரணங்களாகக் காட்டுவது இலங்கையை மேலும் மேலும் துன்பத்துக்கும் இழப்புக்களுக்குமே இட்டுச் செல்லும். அரசியற் தீர்வினை நாட்டின் அரசியல் அமைப்பாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஒப்புதலே பிரதானமானதாகும். இரண்டு பெரும் சிங்களக் கட்சிகளும் உண்மையாகச் செயற்பட்டால் இதனை மிகச் சுலபமாக நிறைவேற்ற முடியும்;.

புலிகள் ஏற்கும் ஓர் அரசியற் தீர்வுதான் சாத்தியமென்றால் சிங்களத் தலைவர்கள் புலிகளுக்கு தனி நாடொன்றை வழங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும். புலிகள் வேறொரு அரசியற் தீர்வையும் முன்வைக்கவும் மாட்டார்கள்ää ஏற்கவும் மாட்டார்கள் என்பதுதான் உண்மை. புலிகள் ஏற்பது அல்லது ஏற்காதது ஒருபுறமிருக்க அதற்கு முதலில் தமிழ் ஜனநாயக சக்திகளும்ää இந்தியாவும் மற்றும் இலங்கையின் சமாதானத்தின் மீது அக்கறை கொண்ட சர்வதேச சமூகங்களும் நியாயமானதென ஏற்கக் கூடிய ஓர் அரசியற் தீர்வை இலங்கை அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒருமுகமாக ஆக்கி நாடாளுமன்றத்தில் அரசியல் யாப்பாக ஆக்க வேண்டும். அதன் பின்னனரே. புலிகளின் ஒத்துழைப்பை அல்லது பலிகளின் திருத்தங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். முதலில் பிரதானமான சிங்களக் கட்சிகளின் தலைவர்கள் தமது நியாயங்களையும் நேர்மையையும் இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகங்களுக்கும் நிலைநிறுத்துதல் வேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சினையின் தோற்றத்துக்கும்; அது தொடர்ச்சியாகக் கூர்மையடைந்ததிற்கும்; 1931ம் ஆண்டு இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட சர்வசன வாக்கெடுப்பு தொடங்கி எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்களத் தலைவர்கள் மேற்கொண்ட இனவாத ரீதியான நடவடிக்கைகளும் 1970கள் மற்றும் 1980களில் தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதமுமே மூலகாரணங்களாகும். சிங்கள இனவாத ஆதிக்கம் கொண்ட இலங்கையின் அரசியல் அமைப்புக்களுக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை நலன்களுக்கும் இடையில் வளர்ச்சியடைந்த முரண்பாடுகளே இன்றைய நிலைமைகள் வளர்ச்சியடைவதற்கான அடித்தளம் என்பதை புரிந்து கொள்வது மிக அவசியமாகும். புலிப் பயங்கரவாதமும் அதன் விரிவாக்கமும் வளர்ச்சியடைந்த இனமுரண்பாட்டின் கிளை விளைவாகும். புலிப்பயங்கரவாதமும் இன்று தமிழர்களின் நலன்களுக்கு எதிரானதாகவே வளர்ந்துள்ளது. இந்நிலையில்ää அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்;வு காண்பதற்கு மாறாக அனைத்துக்கும் புலிகளை முன்னிலைப் படுத்துவதும்ää தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்கு புலிகளின் ஒப்புதலைப் பெற்றால் மட்டும் போதியது என முயற்சிப்பதுவும் சரியான அணுகுமுறையாகாது.

1987ம் ஆண்டு இந்திய-இலங்கை சமாதான உடன்பாடு ஏற்பட்ட போது அதனை வெற்றிகரமாக்குவதற்கு சிறிலங்கா ஆட்சியாளர்களினதும் புலிகளினதும் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்தியா முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இவை இரண்டும் தனித்தனியாகவும் கூட்டாகவும் மேற்கொண்ட சதிகாரத் தனமான நடவடிக்கைகள் இந்தியாவை பெரும் தர்மசங்கடத்தில் மாட்டின. இவ்வேளையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எல்லா வகையான சங்கடங்களுக்கு மத்தியிலும் ஓரளவு பலமான சக்தியாக நின்று இந்தியாவின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டது. அதற்காக சுமார் 1000 தோழர்களைத் தியாகம் செய்தது. அந்தத் தியாகங்களுக்கும் துணிச்சலான முயற்சிகளுக்கும் சிறிலங்கா அரசோää பிரதானமான தமிழக அரசியற் தலைவர்களோää அல்லது சர்வதேச சமூகங்களோ உரிய ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்காததினால் எல்லாம் வீணாகிப் போயின. 2002ம் ஆண்டு சிறிலங்கா அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமானது தமிழர்கள் மத்தியில் இருந்த மாற்று அரசியற் சக்திகளை மிகவும் பலவீனப்படுத்தி விட்டது. எவ்வாறாயினும் ‘எப்போதும் இல்லை என்பதை விட காலதாமதமாயினும் உடனடியாகச் செய்யப்பட வேண்டும்| என்ற பழமொழிக்கிணங்க இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியற் தீர்வொன்றை காண்பதில் சிறிலங்கா அரசும் எதிர்க்கட்சியும் இந்திய அரசும் சர்வதேச சமூகங்களும் உடனடியாக உரிய அணுகுமுறையுடன் விரைந்து செயற்பட வேண்டும் என விரும்புகிறேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியற் தீர்வுக்கு சாத்தியமான சிபார்சுகளை வரைவதற்காக அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவொன்றையும் அத்துடன் நிபுணர்கள் குழுவொன்றையும் நியமித்துள்ளார். இக்குழுக்கள் ஓரளவு சிறப்பாக செயற்பட்டு வருவதாக அறிகின்றேன். இக்குழுக்களில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களை நான் நேரடியாக அறிவேன். பலர் மிகவும் முற்போக்கான ஜனநாயகவாதிகள்சமஷ்டி அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தமிழ்மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்கள் என்பதால் அவர்கள் பிரதானமான விடயங்கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ள வகையில் ஒரு நியாயமான அரசியற்; தீர்வுத்திட்டத்தை காலதாமதமின்றி வெளிக்கொணர்வார்கள் என நம்புகிறேன். ஜனாதிபதி அவர்களும் இக்குழுக்களினூடாக வெளிப்படும் திட்டத்தை சகல கட்சிகளுடனும் பேசி அரசியல் யாப்பாக ஆக்குவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாக அறிவித்துள்ளார். இவையெல்லாம் தற்போதைக்கு நம்பிக்கை ஊட்டுவனவாக உள்ளன.

எவ்வாறாயினும் இவ்வாறான முயற்சிகள் கடந்தகாலத்திலும் உச்சமட்ட நம்பிக்கைகளை உருவாக்கி பின்னர் ஒன்றுமே இல்லை என்று போனதை பல தடவை நாம் கண்டு ஏமாந்து போயுள்ளோம். இலங்கையின் கடந்த எழுபத்தைந்து வருட அரசியல் வளர்ச்சி முறையானது இலங்கையின் பிரதான அரசியற் பிரச்சினைகளைத் தானே தீர்ப்பதற்கான அரசியற் பொறிமுறைகளை வளர்த்துக் கொள்ளவில்லை. இலங்கையின் தேசியத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் இனவாதிகளினதும் அதிதீவிரவாதிகளினதும் அழுத்தங்களுக்குப் பணிந்து உரிய நேரத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறினர். இதனால் இலங்கையின் இனப்பிரச்சினை இந்தக் கண்டத்தின் பிரச்சினையாகி இப்போது சர்வதேச நாடுகளின் பிரச்சினையாகி விட்டது. இந்தியா மட்டும் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவ முன்வந்தபோது இலங்கையின் அரசியல் அமைப்பானது அதன் தலைவர்களை சரியான உணர்வுகளுடன் தானாகக் கிடைத்த வாய்ப்பை செயற்படவிடாது தடுத்துவிட்டது. அப்போதைய அமைச்சர்களும்இறந்து போன அமைச்சர்களின் மகன்களும் இப்போது தாங்களும் தங்கள் தந்தையர்களும் நாட்டுக்கும் மக்களுக்கும் இழைத்த பாரதூரமான தவறுகளுக்கு இந்தியாவிடம் மறைமுகமாக மன்னிப்புக் கேட்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு இருபது வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. இன்னமும்; கூட பிரதானமான கட்சிகளில் உள்ள பல சிங்களத் தலைவர்கள் இனப்பிரச்சினை தொடர்பாக குறுகிய சிந்தனைகளையே கொண்டிருக்கின்றனர்; - சிங்கள மையமாகவே சிந்திக்கின்றனர் - பிரச்சினைகளி;ன் மீது ஒரு சிங்கள வெற்றியை நிலைநாட்டிக் கொண்டால் மீண்டும் சிங்கள ஆதிக்கத்தை நிர்ந்தரமாக நிலைநாட்டிக் கொள்ளலாம் என்ற கற்பிதத்திலேயே உள்ளனர் - தமது கடந்த தலைமுறையினதும் தமதும் தவறுகளுக்கு திருத்தங்கள் செய்யும் ஏற்பாடுகளிலோ அல்லது சமத்துவம்சகோதரத்துவமஉண்மையான மக்களாட்சி என்ற அரசியல் விழுமியங்கள் மீது நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அபிலாஷையோ இவர்களிடம் இல்லை.

இதனாலேயே இனமுரண்பாட்டின் ஊடாக மேலும் மேலும் சிக்கலடைந்த நிலைமைகள் இப்போது இனவேறுபாடுகள் சித்தாந்த வேறுபாடுகளுக்கப்பால் இலங்கையின் அனைத்துக் கட்சிகளையும் இந்தியாவின் நேரடி ஈடுபாட்டைக் கோரி கதறி நிற்க வைத்துள்ளது. அது மட்டுமல்லாது அமெரிக்காபிர்pத்தானியாநோர்வேபெல்ஜியம்டென்மார்க் சுவிற்சர்லாந்து யப்பான்சீனாஆவுஸ்திரேலியாதென்னாபிரிக்கா என ஒரு நீண்ட பட்டியல் நாடுகள் இலங்கையில் விசேட தூதுவர் மற்றும் விசேட பிரிவு என அமைத்து களமிறங்கி முகாமிட்டுள்ளன. இலங்கையின் தற்போதைய நிலைமை என்னவெனில் இலங்கையின் ஜனநாயக மற்றும் முற்போக்கான தலைவர்கள் எவ்வளவுதான் நேர்மையாக முயற்சித்தாலும் ஒரு முழுமையான அரசியற் தீர்வுத் திட்டத்தை வெற்றிகரமாக உருவாக்குவதற்கும் அதனைப் பூரணமாக நடைமுறையாக்குவதற்கும் இந்தியாவினதும்பிரதானமான சர்வதேச நாடுகளினதும் அக்கறையுடனான ஈடுபாடும் மனமார்ந்த ஒத்துழைப்பும் அவசியமாகும்.

மேலும் தமிழர்கள் மத்தியிலுள்ள தமிழ் ஜனநாயக சக்திகள் மிகவும் பலவீனப்படுத்தப்பட்டும்மிகவும் சிரமமான சூழலுக்குள் அகப்பட்டிருப்பதனால்ää இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஒரு நியாயமான அரசியற் தீர்வொன்றினை சிறிலங்கா அரசு உருவாக்குவதற்கும் அதனை நடைமுறையாக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை தமிழகத்தின் மாண்புமிகு முதல்வர் அவர்களும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவரும் தமிழகத்தின் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் ஒருநிலைப்பாட்டின் அடிப்படையில் முயற்சிக்க வேண்டும் என்பது எனது பெருவிருப்பமாகும்